உணவில்லாத பொருட்களின் பணவீக்கம் 57.1 விகிதத்தினால் உயர்வு!

Date:

இலங்கையின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் 5.8 விகிதத்தினால் அதிகரித்துள்ளது.

2022 செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே அந்த அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 250.4 புள்ளிகளாக இருந்தது. எனினும் அது செப்டம்பர் மாதத்தில் 256.2 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இது அதிகரிப்பு சந்தை பொதியில் செலவீனத்தை 1879 ரூபாவால் உயர்த்தியுள்ளது.

இதேவேளை உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 84.6 விகிதத்தில் இருந்தநிலையில் செப்டம்பர் மாதம் 85.8 விகிதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் உணவில்லாத பொருட்களின் பணவீக்கம் 57.1 விகிதத்தினால் அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...