காலிமுகத்திடல் போராட்டத்தில் குழந்தைகளை துன்புறுத்தியதாக பொலிஸார் மீது முறைப்பாடு

Date:

கொழும்பு  காலிமுகத்திடல் மைதானத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களை பயமுறுத்தி துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் மற்றும் செயற்பாட்டாளர்கள் குழுவினர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

அதற்கமைய மதிவெலவில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 15 வயது குழந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை காணொளி காட்சிகளும், மற்றொரு காணொளியில் தாயொருவர் தனது குழந்தையிடமிருந்து இழுத்துச் செல்லப்படுவதையும் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டன.

போராட்டக்காரர்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காவல்துறை மிருகத்தனத்தை சமூக ஊடகங்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...