அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
29 பேர் கொண்ட இந்தக் குழுவில் 17 வீரர்களும் 12 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்த அதிகாரிகளில் தலைமைப் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர்கள், மேலாளர், வேகப் பயிற்சியாளர், சுழல் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 03.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் இலங்கை அணி துபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நேரடியாக விமானம் மூலம் செல்லவுள்ளது.