தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கை!

Date:

நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஒக்.17) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் சித்தாந்தங்கள், தமிழ் கட்சிகள், நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சித்தாந்தங்கள் குறித்து ஆராய்ந்து நல்லிணக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...