பெற்றோலிய சேவைகளை சீர்குலைக்கும் ஊழியர்களுக்கு நடவடிக்கை: எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை

Date:

இலங்கையில் பெற்றோலிய சேவைகளை சீர்குலைக்கும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 6 மாதங்களில் பெற்றோலிய சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ள பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்ததை அடுத்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறி சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பது கண்டறியப்பட்டால், எந்தவொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கத்திற்கும் எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ, சபுகஸ்கந்த மற்றும் முத்துராஜவெல எரிபொருள் விநியோக நிலையங்களின் ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) திருத்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளின்படி திருத்தங்களுடன் ஒக்டோபர் (04) அன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கை பெற்றோல் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும்   இந்தியன் ஆயில் கம்பெனி (LIOC) தவிர மற்ற தரப்பினருக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் வழங்குவதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

Popular

More like this
Related

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...

இலங்கைத் தூதுவர் – நேபாளப் பிரதமர் சந்திப்பு!

நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய...

காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது...