மினுவாங்கொடை முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவி தேவை!

Date:

கடந்த 6ஆம் திகதி மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

833214292V என்ற தேசிய அடையாள இலக்கம் கொண்ட ஜயகொடவைச் சேர்ந்த சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதி, இல. 10 இல் வசிக்கும் 39 வயதுடையவர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591608
உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591610
நிலைய கட்டளைத் தளபதி மினுவாங்கொடை – 0718591612

மினுவாங்கொட பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...