அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் இன்று நாட்டுக்கு!

Date:

பல அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உதவிகள் இன்று நாட்டை வந்தடைகின்றன.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் மூலம், இலங்கை அதே மருந்துப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் இலவசமாகப் பெறுகின்றது.

அந்த மனிதாபிமான அமைப்புகளால் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு 04 மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த 04 மருந்துப் கையிருப்புகளின் மொத்தப் பெறுமதி சுமார் 4.6 பில்லியன் ரூபா என வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவிகளைப் பெறுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...