இந்தியாவின் மதசார்பற்ற கொள்கைக்காக உழைத்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவு!

Date:

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார்.

இவர் சோஷலிஸ போராளிகளான ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரால் அரசியலில் ஈர்க்கப்பட்ட இவர், பின்னாளில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்களால் அரசியலில் வார்த்தெடுக்கப்பட்டார்.

அவசர நெருக்கடியை எதிர்த்து 19 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த போது, உ.பி மாநில அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவானார்.

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் தலைமையில் ஜனதா தளம் எழுச்சி பெற்ற போது வீசிய அரசியல் அலையில், 1989 ஆம் ஆண்டு உ.பி. மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்ற தருணம் அயோத்தி பாபர் மஸ்ஜித் விவகாரம் மதவாத சக்திகளால் கொந்தளிப்பான நிலைக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது.

அக்கால கட்டத்தில் அந்த வளாகத்தை சட்டப்படி பாதுகாக்க அவர் எடுத்துக் கொண்ட நிர்வாக நடவடிக்கைகள் துணிச்சல்மிக்கவையாக இருந்தது.

அம்மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டிற்காகவும், அவர்களின் மேம்பாடுகளுக்காகவும் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை.

ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் ஜனதா தளத்தின் பிரதமர்களாக தேவகௌடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக இருந்த போது, ஒன்றியத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக அவர் இருந்தார்.

அப்போது அவர் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்காலம் முழுக்க நினைவு கூறத்தக்கது.

சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் உறுதியாக களமாடிய அவரது மறைவு, வட இந்திய அரசியலுக்கு பேரிழப்பாகும்.

இவரது மறைவையொட்டி தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்து இரங்கல் செய்தியில்,

முலாயம் சிங் யாதவ் போன்ற தலைவர்களின் பங்களிப்புகள் அதிகமாக தேவைப்படும் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரை நாடு இழந்திருக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், சோஷலிஸ தோழர்களுக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கும், உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...