இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தான்: லத்தீப் பாரூக்

Date:

18வது நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் மாநிலத்தை ஆட்சி செய்த திப்பு
சுல்தான் மைசூரின் வேங்கை என வர்ணிக்கப்பட்ட மாபெரும் வீரராவார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த
முதலாவது சுதந்திரப் போராளி இவர்தான். பின்னர் தனது உயிரையும் தியாகம் செய்தார்.

மைசூரின் சுல்தான் ஹைதர் அலி அவரது மனைவி பாத்திமா பக்றுன் நிஸா ஆகியோருக்குப் புதல்வராக 1750 நவம்பர் 10ல் தேவானாஹல்லி இன்றைய பெஹ்களுரில் பிறந்தவர் தான் திப்பு சுல்தான்.

1782 முதல் 1799 வரை இவர் மைசூரை ஆட்சி செய்தார். 1766ல் தனது 15வது வயதில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதலாவது மைசூர் யுத்தத்தில் அவர் தனது தந்தையோடு பங்கேற்றார். 1767ல் தனது 16வது வயதில் கர்நாடகாவுக்குள் ஊடுறுவிய பிரிட்டிஷ் குதிரைப் படைப்பிரிவை எதிர்த்துப் போராடிய படையணியின தளபதியாக அவர் கடமையாற்றினார்.

அவரது தந்தையால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பிரான்ஸ் அதிகாரிகளிடமிருந்து அவர் இராணுவ உத்திகளைக் கற்றுக் கொண்டார். 1782 டிசம்பர் 29ல் திப்பு சுல்தான் தனது தந்தையிடமிருந்து ஆட்சி அதிகாரங்களைப் பொறுப்பேற்று சுல்தான் என்ற மகுடத்தையும் சூடிக் கொண்டார்.

தனது துணிச்சல், ஆற்றல் என்பன காரணமாக பெரும் புகழ் அடைந்த அவர் தென் இந்தியாவில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து மிகக் கடுமையாகப் போராடினார்.

ஒரு சக்தி மிக்க இராணுவ ஜெனரலாகவும் பூகோள அரசியலின் சூட்சுமங்களை நன்கு புரிந்து கொண்டவராகவும் (பிரிட்டிஷாருக்கு எதிராக பிரஞ்சுக் காரர்களைப் பயன்படுத்துவது) அவர் காணப்பட்டார்.

யுத்தத்தில் நவீன அனுகுமுறைகளையும் அவர் கையாண்டார். முதன் முதலாக ரொக்கட் தாக்குதலை நடத்தியது அல்லது முதன் முதலாவதாக ரொக்கட் தாக்குதல்
நடத்திய இராணுவ அணிகளில் ஒன்றாக இருந்தது திப்பு சுல்தானின் இராணுவம் தான் என்பது வரலாறாகும். “ஒரு குள்ளநரியைப் போல் பல நூற்றாண்டுகள் உயிர் வாழ்வதை விட ஒரு சிங்கத்தைப் போல் ஒரு நாள் உயிர் வாழ்வது மேலானதாகும்” என்ற கூற்றை அவர் மிக உறுதியாக நம்பிப் பின்பற்றினார்.

திப்பு சுல்தானும் அவரது தந்தை ஹைதர் அலியும் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக நான்கு யுத்தங்களில் ஒன்றாகப் பங்கேற்றுள்ளனர். மராத்தியர்கள், திருவிதாங்கூர், கர்நாடகம், மலபார், குடகு ஆகிய படைகளுக்கு எதிராகவும் அவர்கள் பல யுத்தங்களை சந்தித்துள்ளனர்.

நாணயக் குற்றிகளின் அறிமுகம், சந்திர சூரிய கலப்பு கலண்டர், புதிய காணி
வருமான ஒழுங்கு முறை என பல புதிய விடயங்களை அறிமுகம் செய்ததோடு
மைசூரில் பட்டு உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கும் வித்திட்டார்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள பல்லாயிரக் கணக்கான மக்களால் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் வீரம் மிக்க ஒரு மன்னராகவும் நினைவு கூறப்படுகின்றார்.

பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பனிக்கு இந்தியாவில் நிபந்தனைகளை விதிக்கும் அளவுக்கு ஆற்றலும் துணிச்சலும் மிக்க கடைசி மன்னராகவும் அவரே திகழ்ந்தார்.
1799 மே மாத ஆரம்பத்தில் பிரிட்டனும் அதன் நேச அணிகளும் மைசூரின்
தலைநகரமான ஸ்ரீரங்கபட்டிணத்தை சூழ்ந்து கொண்டனர்.

மே மாதம் நான்காம் திகதி தலைநகரின் காவல் மதிலை உடைத்துக் கொண்டு
முன்னேறின. இதைக் கேள்வியுற்ற திப்பு சுல்தான் அந்த இடம் நோக்கி
வேகமாக முன்னேறினார்.

ஆனால் தனது நகரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் தனது உயிரையே துறந்தார். இந்த யுத்தத்தின் முடிவில் நகரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஏனைய
படைவீரர்களின் பிணக்குவியலின் மத்தியில் இருந்து திப்பு சுல்தானின் உடலும் மீற்கப்பட்டது.

ஸ்ரீரங்கபட்டிணம் நகரமும் பறிபோனது. இங்கிலாந்தில் உள்ள நூதனசாலையில் திப்பு சுல்தானின் வீரம் மிக்க வாள் இன்றும் ஒரு அரும்பொருளாகப் பேணப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்த விரட்ட அவர் துருக்கி மற்றும்
பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடினார்.

திப்பு சுல்தானின் மரணத்தோடு மைசூர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் வரும்
இன்னொரு மாநிலமானது.

1799 மே 4ல் திப்பு சுல்தானின் மரணம் ஸ்ரீரங்கபட்டிணத்தின் வீழ்ச்சி என்பனவற்றை அடுத்து ஷெஸாதா ஹைதர் அலி மற்றும் குடும்பத்தவர்கள் 1799 ஜுன் 19ல் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் கிழக்கு இந்திய கம்பனியின் காவலின் கீழ் வைக்கப்பட்டனர்.

எவ்வாறேனும் ஷெஸாதா ஹைதர் அலி அந்தக் காவலில் இருந்து தப்பினார்.
திப்பு சுல்தானின் குடும்பம் மிகவும் திட்டமிட்ட வகையில் வறுமை நிலைக்குத்
தள்ளப்பட்டது.

2009ல் தான் அந்தக் குடும்பம் மீண்டும் இளவரசர் அந்தஸ்த்துக்கு மீட்கப்பட்டது.

பிரிட்டனின் அனுசரணையில் செயல்பட்ட ராஷ்டிரிய சுயம் சேவா
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேலும் அதன் முன்னணி பிரசார அமைப்புக்களான
பிஜேபி உட்பட இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க திப்பு சுல்தான்
நடத்திய போராட்ட வரலாற்றை மலினப்படுத்தி அழித்து விடும் வகையில்
பிரசாரங்களில் ஈடுபடலாயின.

கிழக்கு இந்திய கம்பனிக்கு எதிரான அவரின் போராட்டங்கள் இதில்
நேர்த்தியாகக் காட்டப்பட்டிருந்தன.

சென்னையில் ஒரு வைபவத்தில் பேசும் போது மாயா மஹேஸ்வரி என்பவர்
இந்த பிரசாரங்களை முற்று முழுதாக நிராகரித்தார்.

திப்பு சுல்தானின் அமைச்சர்கள் யாவரும் இந்துக்களே என்று அவர் தெரிவித்தார்.
இந்த தீய பிரசாரங்கள் பற்றி “திப்பு சுல்தான் : ஆர்எஸ்எஸ். பிஜேபிக்குள் கூட
பல்வேறு தரப்பட்ட கதைகள்” எனும் கட்டுரையில் பிரபல பத்தி எழுத்தாளர்
ராம் புனியானி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களாக திப்பு சுல்தான் பற்றி பிஜேபி பல தீய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. தற்செயலாக ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவின்ந் “திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வீர மரணம் அடைந்தார்.

யுத்தங்களின் போது மைசூர் ரொக்கட்டுக்களை அறிமுகம் செய்வதிலும், விருத்தி செய்வதிலும் பயன்படுத்துவதிலும் அவர் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்” என்று குறிப்பிட்டு விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

பி.எஸ். யெத்தயூரப்பா தேர்தல் பிரசாரத்தின் போது திப்பு சுல்தான் அணியும்
தலைக்கவசம் பற்றி பாராட்டிப் பேசியதோடு அவரது வாளைப் போன்ற ஒரு
வாளையும் ஏந்தி நின்றார்.

1970களில் ஆர்எஸ்எஸ் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் திப்பு சுல்தானைப் பாராட்டி அவர் ஒரு தேசப்பற்றாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாரத் பாரதி என்ற தொடரின் ஒரு பகுதியாக இந்தப் புத்தகம் வெளியானது.

மறுபுறத்தில் குறிப்பிடத்தக்க கன்னட நாடக எழுத்தாளரான கிரிஸ் கெர்னாத் திப்பு சுல்தானை மிகவும் பாராட்டி எழுதியதோடு பெங்களுர் விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

திப்பு சுல்தான் மட்டும் ஒரு இந்துவாக இருந்திருந்தால் மகாராஷ்டிராவில்
சிவாஜிக்கு வழங்கப்படும் அதே மரியாதை கொடுக்கப்பட்டிருக்கும் என்றும்
தெரிவித்துள்ளார்.

ஸ்ரீங்கேரி மடாலயத்தை பட்வர்தனின் மராட்டிய இராணுவம் சூறையாடியபோது அதை மீட்டு திப்பு சுல்தான் மீண்டும் அதற்குரிய கௌரவத்தோடு அந்த மடாலயத்தை நிறுவினார். அவருடைய ஆட்சியின் போது பத்து தினங்கள் கொண்டாடப்படும் தூஷ்ரா பண்டிகை மைசூரின் சமூக வாழ்வியலில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக திகழ்ந்தது.

‘சுல்தான் ஏ குதாதாத்’ என்ற தனது நுலில் ஷர்பராஸ் ஷேக் திப்பு சுல்தானின் கொள்கை அறிக்கையை மீள் பிரசுரம் செய்துள்ளார். சமய அடிப்படையில் அவர் யார்மீதும் பாரபட்சம் காட்டவில்லை. தனது கடைசி மூச்சு வரை அவர் தனது
ராஜ்ஜியத்தைக் காப்பாற்றினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திப்பு சுல்தானின் மரணத்தின் புகழ்பாடும் கர்நாடக நாட்டுப்புற பாடல்கள் பல
(லவானீஸ்) உள்ளன. அவை எதிலும் அவர் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் எதுவும் இல்லை. 19ம் நூற்றாண்டில் அவை மிகவும் பிரபலமாக இருந்தன.

அவர் யுத்தகளத்தில் மரணம் அடைந்த ஒரு வருடங்களில் 1800 களில் இந்தப் பாடல்கள் பெரும் புகழ் பெற்றன.

அவரை நாம் முழு அளவில் அவதானிக்க வேண்டும் தனது பிரதம மந்திரியாக
அவர் பிராமண இந்துவான பூர்ணய்யா என்பவரை நியமித்திருந்தார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் மீதும் அவர் பெரும் மரியாதை
கொண்டிருந்தார்.

அந்த வகையில் அவர் இந்துக்களை கொலை செய்தார் என்பது எந்த வகையிலும் சாத்தியமாகாத ஒன்று. நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை அவர் புனர் நிர்மாணம் செய்தார் இன்னும் பல கோயில்களை அவர் கட்டினார்.

இந்த வீரம் மிக்க ஒரு மன்னனின் வாழ்வை சமநிலையில் நோக்க வேண்டும்.
அவர் பிரிட்டனின் பெரும் படையை வீரத்தோடு எதிர் கொண்டார்.

பிரிட்டன் முற்றிலும் வித்தியாசமான ஒரு படை அணியைக் கொண்டது என்பதை
தெரிந்திருந்தும் அதை எந்த விலை கொடுத்தேனும் எதிர்த்து நிற்க வேண்டும்
என்ற துணிச்சலை அவர் கொண்டிருந்தார்.

அந்த வகையில் இந்திய மண்ணில் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடியாக அவரே திகழ்கின்றார்.

திப்பு சுல்தானை ஒரு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஒரு வீரனாகக் காட்டுவதற்கு பதிலாக அவரை ஒரு தீய சக்தியாகக் காட்ட முனையும் இனவாதிகளின் ஊசலாட்டங்கள், தமது இனவாத கருத்தியலை தக்க வைத்துஊக்குவிப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளே தவிர வேறொன்றும் இல்லை.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...