இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 435 கொலைச் சம்பவங்கள்!

Date:

இலங்கையில் இவ்வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையில் 521 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது மிகப் பெரிய எண்ணிக்கையிலான உயர்கள் பலியாகியுள்ளதாக கூறிய அமைச்சர், ஒவ்வொரு குடிமகனுக்கும் கௌரவமான மரணம் கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் கூறினார்.

இந்த குற்றவாளிகளின் சாட்சியங்கள் விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெறுவதாகவும், தற்போதுள்ள சட்ட நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளில் விசாரணைகளை நடத்துவது தொடர்பில் பொருத்தமான திருத்தங்களை அடையாளம் காண பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...