இன்று வைபகரீதியாக வெளியிட்டு வைக்கப்படும் (සඳ දෙකඩ සඳ) நிலவை பிளந்த நிலவு நூல்பற்றி!

Date:

நூலாசிரியர் அப்துர் ரஹ்மான் முபாரக் பூரி அவர்கள் எழுதிய அர்ரஹீக் அல் மக்தூம் நூல் உலகளவில் மிகவும் பிரபல்யமான நூலாகும். நூறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்பதும் பல கலாசாலைகளின் பாட நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நபிகளார் பிறந்த மாதத்தில் அன்னாரை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டிய தேவை அதிகம் காணப்படுகின்றது. அதனை நிறைவேற்றி வைக்க எடுக்கப்பட்டுள்ள பெரு முயற்சியே இது When the moon split (සඳ දෙකඩ සඳ) எனும் நூல் சகோதர சிங்கள மொழியில் மொழிமாற்றம் பெற்று இன்று வெளியிட்டு வைக்கப்படுகிறது.

நபியவர்களது வாழ்வியல் மற்றும் வரலாறு அற்புதமானது. உலக ஆளுமைகள் வரிசையிலும், வரலாறு படைத்தவர்கள் வரிசையிலும், வரலாற்றின் திருப்பத்தின் திசையை மாற்றியவர்கள் வரிசையிலும் பிரதான பன்முக ஆளுமை கொண்டவர்கள் என்றும அல்லாஹ் அவர்களை உயர்த்திப் பேசிகின்றான்.

அன்பு நபிகளார் செய்த தியாகம், அர்ப்பணம், சாதனை அளப்பரியது. இந்நூலில் அதனைக்காணலாம் ரஹீக்கின் போக்கும் உள்ளடக்கமும் போலன்றி முழுவதுமாக நபிகளாரின் வாழ்வியலாக இந்நூல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கள இலக்கிய தளத்தில் ஈடுபாடுமிக்க 16 க்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்த சமன் புஷ்ப லியனகே (Saman puspa Liyanage) எனும் கைதேர்ந்த மொழியியல் விற்பண்ணர் When the moon split எனும் ஆங்கில நூல் வழியாக இந்நூலை அழகுற மொழி பெயர்த்துள்ளார்.

1886களில் எழுதப்பட்ட 5 அங்கங்களை உள்ளடக்கிய Leo Tolstoy இன் The Power of Darkness நாடகத்தையும் 2015 களில் ක්රීරු අඳුර எனும் பெயரில் சிங்களத்தில் மொழிபெயரத்துள்ளார்.1902 வரை இது ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Maxim Gorky யின் Tales of Italy ஐ ඉතාලි කතා எனும் பெயரில்
2018 ல் மொழிமாற்றம்செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...