இறைத் தூதரை அறிமுகம் செய்யும் ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) சிங்கள மொழி நூல் வெளியீட்டு விழா கொழும்பில்!

Date:

2022 மீலாதுன் நபியை முன்னிட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பிரபல எழுத்தாளர் சமன் புஸ்ப லியனகே அவர்களினால் இந்த புத்தகம் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

பஹன மீடியா நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில்  இடம்பெறவுள்ளது.

இதேவேளை நிகழ்வில் கொழும்பு மாவட்ட உதவி கல்வி பணிப்பாளர் கரவில கொட்டுவ தம்மாதிலக்க தேரர் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

‘நியூஸ் நவ்’ இணையத்தளம் இந்நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...