இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டம்: முதல் பழங்கள் ஜனாதிபதிக்கு

Date:

இலங்கையின் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் பழங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (ஒக்டோபர் 20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லக்ஷ்மன் குமார காமியின் கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஆப்பிள் தோட்டத்தை பார்வையிட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிள் விதை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டு பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இரண்டு ஏக்கர் வளமான பழங்கள் கிடைத்துள்ளதாகவும் லக்ஷ்மன் குமார   தெரிவித்துள்ளார்.

இந்த பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்த தேவையான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும் இலங்கையில் எந்த பிரதேசத்திலும் பயிரிடக்கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில்  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச மற்றும் அசங்க லயனல் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...

QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக...