இலங்கையில் 1163 பள்ளிவாசல்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யாமல் இயங்குகின்றன: இப்றாஹீம் அன்சாா்!

Date:

நான் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ஒர் வருடம் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் 2544 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் 1163 பள்ளிவாசல்கள் திணைக்களத்தில் பதியப்படாதவைகளாகும். சில பள்ளிவாசல்கள் 10 வருடங்கள் 72 வருடங்கள் சென்றும் திணைக்களத்தில் பதியப்படாமல் வைத்துள்ளனா். கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் பள்ளிவாசல்கள் மத்ராசாக்களை பதியப்படவில்லை. இவ் விடயமாக பௌத்த சாசன அமைச்சின் செயலாளா்,பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் நாங்கள் நட்புறவுடனும் , அறிவுபூர்வமாகவும் அனுகி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பயனாக சகல பள்ளிவாசல்களையும் பதிவதற்கு அவா்கள் அனுமதி தந்துள்ளாா்கள் அவைகள் அனைத்தையும் முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பணிப்பாளா் இப்றாஹீம் அன்சாா் தெரிவித்தாா்.

மருதானையில் உள்ள அல் சபா (அகில இலங்கை முஸ்லிம் இளைஞா் நிறுவனத்தினால் 6வது வருடமாகவும் ரமலான் வினாவிடைப் போட்டியான ரமலான் மழை பரிசு வழங்கும் திட்டம் 12.10.2022. அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் தாசீம் மௌலவி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளா் இப்றாகீம் அன்ஸாா் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பணப் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளா் என்.எம். அமீன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளா் அஷ்ஷெய்க் அர்க்கம் நுாா்ரஹமத், அகில இலங்கை வை.எம்.எம். ஏ தலைவா் இஹ்சான் அஹமட் ஹமீட், சிரேஸ்ட ஊடகவியலாளா் மொஹமட் ரசூல்டீன் இவ் அமைப்பின் உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.

பணிப்பாளா் இப்ராஹீம் அன்சாா் தொடா்ந்து அங்கு உரையாற்றுகையில் ….

தினைக்களத்தின் கீழ் உள்ள பள்ளிவாசல் சம்பந்தமாக உள்ள நிறுவனமான வக்பு சபையில் பள்ளிவாசல்கள் பிரச்சினைகள் நுாற்றுக்கணக்கில் விசாரனைகளுக்காகக் தேங்கிக் கிடக்கின்றன. சில பள்ளிவாசல்களில் உள்ள பரிபாலன சபைக்குள் எழும் சிறிய ,சிறிய பிரச்சினைகளுக்காக கொழும்பு வந்து வக்பு சபையில் வழக்குத் தாக்கல் செய்கின்றனா். இதனால் மாதக்கணக்கில் இதனைத் தீர்க்கும் விடயத்தில் காலதாமதம் செல்கின்றது. உதாரணமாக ஒர் பள்ளிவாசல் உறுப்பிணா் குர்பான் கொடுப்பதற்கு தன்னை நிர்வாக சபை அனுமதி தரவில்லை எனக் கூறி அந்த நிர்வாக சபைக்கு எதிராக 40 இலட்சம் ருபா நஸ்டம் கோரி வழககு தாக்கல் செய்வதற்கும் ஒருத்தா் என்னை வந்து சந்தித்தாா். அவருக்கு பக்குவமாகப் புத்திமதிகளை கூறி அனுப்பினேன். இவ்வாறான சிறிய பிரச்சினைகளை சில பள்ளிவாசல்களுள் எழுகின்றன. பின்னா் பொலிஸ், நீதிமன்றம் எனச் செல்கின்றாா்க்ள. இதனை ஊர்ப் பெரியாா்கள் பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் தமது உள்விவகாரங்களை தாமே பேசித் தீர்த்துக் கொள்ளல் வேண்டும்.

மகர சிரைச்சாலையில் இயங்கி வந்த பள்ளிவாசல் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த பள்ளிவாசலுக்கு மாற்றீடாக வேறு இரு காணிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவற்றினை உரிய நிர்வாக சபையியுடன் பேசித் தீர்மாணம் எடுக்கப்படும். அதனை நிர்மாணிப்பதற்கும் நிறுவனம் ஒன்றுடன் பேசியுள்ளோம் எனவும் தெரிவித்தாா்.

மௌலவி சான்றிதழ் பயிற்சி நெறிகள் , பரீட்சைக்களை அரசாங்கத்தினாலே நடாத்துவதற்கும் உரிய ஒரு பாடத்திட்டத்தினை நாங்கள் உரிய புத்திஜீவிகளை கலந்து ஆலோசித்து அதனையும் தயாரித்து வருகின்றோம். அப் பரிட்சைகளை வருடா வருடம் அரசாங்கம் இலவசமாக நடத்தக் கூடிய வகையில் வழிவகைகள் செய்து வருகின்றோம். எனவும் முஸலிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் அண்சாா் அங்கு உரையாற்றினாா்.

இவ்வைபவத்தில் நாட்டின் நாலா பாகத்திலிருந்தும் ரமலான் போட்டி நிகழ்ச்சிகளை தோ்ந்தெடுத்தவா்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அஷ்ர்ப் ஏ சமத்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...