2030 ஆம் ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை 27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் இலங்கை விமானப்படையினரினால் கடந்த 29 அன்று சியாம்பலா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப்பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
வீரவெல இலங்கை விமானப்படை தளத்தை மையமாக கொண்டு இல. 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகாப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைகுண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன் , வேம்பு , ஆத்தி , நாகை , புளி , பருத்தி , பாலை , வீரை , மருது , கித்துள் உட்பட 100,000 விதைகள் தாயரிக்கப்பட்டு வான் வழிமூலம் தெளிக்கப்பட்டன
இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் , பேராதெனிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.