கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பட்ட ரஞ்சன்!

Date:

நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று இரவு 8.15 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அமெரிக்கா செல்லும் வழியில் ஏற எண்ணினார்.

எனினும், அவர் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்கள் விதித்த பயணத் தடை காரணமாக, அவரை திருப்பி அனுப்ப குடிவரவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...