கபூரிய்யாவின் வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பெருந்தகை நவாஸ் கபூர் ஹாஜியார் காலமானார்!

Date:

கபூரிய்யாவின் வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பெருந்தகை நவாஸ் கபூர் ஹாஜியார் காலமானார்

சமூக சேவையில் புகழ்பெற்ற, N.D.H.அப்துல் கபூர் குடும்பத்தின் மற்றொரு வாரிசான
நவாஸ் கபூர் ஹாஜியார் தனது 95 ஆவது வயதில் காலமானார், கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும்.
அதேவேளை, மருதானைப் பள்ளிவாசல், சத்தாம் வீதி பள்ளிவாசல் ஆகியவற்றின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும் இருந்ததோடு, இலங்கை சாரணர் பிரிவிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தில் பாக்கீர் மாக்கார் தலைவராக இருந்த காலத்தில் ஸ்தாபக பொருளாளராகவும் இருந்துள்ளார். அன்னாரின் ஜனாஸா நேற்று மருதானைப் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தொழுகை இடம்பெற்று, குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது மரணம் குறித்து கபூரிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தினர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,

கபூரிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் என்.டீ.எச். அப்துல் கபூர் ஹாஜியாரின் பேரனும் கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நம்பிக்கையாளர் சபையின் நீண்ட காலத் தலைவராகவும் இருந்த நவாஸ் கபூர் ஹாஜியாரது பிரிவு செய்தி கேட்டு, கல்லூரி அதிபர் உட்பட ஆசிரியர்கள் அதன் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அப்துல் கபூர் ஹாஜியாருக்குப் பின்னர் அவாது பிள்ளைகளான பழீல் கபூர், ராஃபி கபூர் ஆகியோர் கல்லூரியோடு மிக நெருக்கமாக இருந்ததைப் போன்றே நவாஸ் கபூர் ஹஜியாரும் கல்லூரியோடும் கல்லூரியின் வளர்ச்சியோடும் மாணவர்களோடும் நெருக்கமாகவும் இருந்தார்.

1980- 90 களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தெழுகைக்காக கல்லூரிக்கு வந்து, மாணவர்களது குத்பா பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் உயர் படிப்புக்காக வெளிநாடு செல்லும் போது கல்லூரியில் ஏற்பாடு செய்யப்படும் விழாக்களில் தவறாது பங்கு கொண்டு உயர்கல்விக்காகச் செல்லும் மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வழி அனுப்புவார்.

2015 ஆம் ஆண்டு கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க எழுச்சி விழாவின் போது விசேட அதிதியாக வருகை தந்திருந்த நம்பிக்கையாளர் சபை அங்கத்தினர் சார்பாக பேசும் போது,’கபூரிய்யா பெரு விருட்சமாக வளர்ந்துள்ளது. என்பதை அறியும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என கூறியதும், தனக்கு முடியாத காலத்திலும் அன்றைய கூட்டத்துக்கு சக்கர நாற்காலியில் வந்திருந்ததும் அவர் கல்லூரியின் வளர்ச்சியில் எவ்வளவு அக்கறையுடன் இருந்தார் என்பதைக் கூறப் போதுமானதாகும்.

நிரந்தர மறுமை வாழ்வுக்கான பய ணத்தை மேற்கொண்டுள்ள நவாஸ் கபூர் ஹாஜியாரை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, அன்னாருக்கு மேலான ஜன்னத் துல் பிர்தௌவ்ஸை வழங்குவானாக! அன்னாரது பாவங்களை மன்னித்து, அன்னாரது கபூருடைய வாழ்வினையும்
மறுமை வாழ்வினையும் ஒளிமயமான தாக்கி வைப்பானாக!
தற்போது சவால்களை எதிர் கொண்டுள்ள
கபூரிய்யா அரபுக் கல்லூரி விடயத்தில் அன்னார் விட்டுச் சென்ற நற்பணியினை இன்றைய நம்பிக்கையாளர்களும் மிகச் சிறப்பாக தொடர்வதே, N.D.H.அப்துல் கபூர் ஹாஜியார் நோக்கத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் சிறந்த பணியாகும்.

அன்னாரின் பிரிவால்   துயருற்றிருக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...