கொழும்பு காலிமுகத்திடல் மைதானத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களை பயமுறுத்தி துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் செயற்பாட்டாளர்கள் குழுவினர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
அதற்கமைய மதிவெலவில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 15 வயது குழந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை காணொளி காட்சிகளும், மற்றொரு காணொளியில் தாயொருவர் தனது குழந்தையிடமிருந்து இழுத்துச் செல்லப்படுவதையும் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டன.
போராட்டக்காரர்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காவல்துறை மிருகத்தனத்தை சமூக ஊடகங்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன.