விராட் கோஹ்லி தங்கியிருக்கும் ஹோட்டலில் அவரது அறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விராட் தனது ஹோட்டல் அறையில் இல்லாத போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கிரவுன் டவர்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தது.
இந்த வீடியோ அதே ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோ கோஹ்லி கவனத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவால் கோபமடைந்த விராட் கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஹோட்டல் அறையில் தனது தனியுரிமை ஆக்கிரமிக்கப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
டி20 உலகக் கோப்பை நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டல் அறையில் ரசிகர் ஒருவர் விராட் கோஹ்லியின் அறைக்குள் நுழைந்து வீடியோ பதிவு செய்துள்ளார்.
இது அவரது தனியுரிமை குறித்து மிகவும் சித்தப்பிரமையாக இருப்பதாகக் கூறினார்.
“ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ திகைக்க வைக்கிறது, இது எனது தனியுரிமையைப் பற்றி என்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
எனது சொந்த ஹோட்டல் அறையில் என்னால் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், நான் உண்மையில் எந்த தனிப்பட்ட இடத்தையும் எங்கு எதிர்பார்க்க முடியும்? இந்த வகையானது எனக்கு சரியில்லை.
இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என்று கோஹ்லி பதிவிட்டுள்ளார்.
இதேவேளை கோஹ்லியின் இன்ஸ்டாகிராம் பதிவில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் ‘இது அபத்தமானது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’என்ற கருத்தை வெளியிட்டார்.
கிரவுன் பெர்த் ஹோட்டலில் இந்திய அணி தங்கியுள்ளது. இவ்வளவு பெரிய ஹோட்டலில், வீரர் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹோட்டல் அறைக்குள் நுழைந்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியம் மற்றும் பாதுகாப்பு மீறல் போன்றது. இதனால் ஹோட்டலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன
Virat Kohli has shared disturbing footage of what appears to be strangers recording a video in his hotel room.
📸 Instagram/virat.kohli#T20WorldCup pic.twitter.com/Cq9Dr2uzWc
— Nic Savage (@nic_savage1) October 31, 2022