இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஒக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கில் அவர் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்படாமைக்கான காரணங்களை சமர்பிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கோரியுள்ளது.
கடந்த 29ம் திகதி மனு அனுப்பப்பட்டது.
பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பூர்வாங்க பரிசீலனைக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சனத் நிஷாந்த, போராட்டக்காரர்களுக்கு நீதவான்களால் பிணை வழங்கியதை விமர்சித்ததாகவும், நீதித்துறையின் கண்ணியத்தை அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும், குறித்த அறிக்கையின் மூலம் நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்த தற்போது நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.