பாராளுமன்ற பெண் உறுப்பினர்களை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளில் நியமிக்க இடஒதுக்கீடு உருவாக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது.
அதேநேரம், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பெண்களை உள்ளடக்கி புதிய ஒதுக்கீட்டை உள்ளடக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கூடிய போது மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதற்கிடையில், பாலின சமத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு என்ற கண்ணோட்டத்தில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சமீபத்தில் கேள்வி எழுப்பியது.