சபாநாயகர் பதவி எங்களுக்கும் வேண்டும்:பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்

Date:

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளில் நியமிக்க இடஒதுக்கீடு உருவாக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது.

அதேநேரம், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பெண்களை உள்ளடக்கி புதிய ஒதுக்கீட்டை உள்ளடக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கூடிய போது மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கிடையில், பாலின சமத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு என்ற கண்ணோட்டத்தில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்  சமீபத்தில் கேள்வி எழுப்பியது.

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...