ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் வரம்புகளை மீளாய்வு செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு என்பன ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்படும்.
முன்னதாக, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தொழில்நுட்ப அமைச்சின் கீழும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழும் இருந்தது.
அத்தோடு, தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை முன்பு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இருந்த கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கைத்தொழில் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.