தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது!

Date:

ரயில் ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரயில், வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது.

இதன்காரணமாக, காங்கேசன்துறை முதல் கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயில் சேவை, மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு – கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த ரயில் சேவை குருநாகல் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடக்கு ரயில் சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...