இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இன்று தேசிய சபையிலிருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக இ.தொ.கா தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் பதவியேற்கவுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தேசிய பேரவையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையைப் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இந்த பிரேரணை எதிர்ப்பு இன்றி ஏகமனமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.