நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர்!

Date:

அரசாங்கம் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையான நடுத்தர வர்க்க மக்கள் தற்போது குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ளும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வருமான நிலைமையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னைய பொருளாதார நிலைமைகளை மக்கள் அடைய முடியவில்லை எனவும் மக்கள் தங்களின்பொருளாதார நிலைகளில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக அரசாங்கம் சிறந்த கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இந்திரஜித் அபோன்சு மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...