நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களின் 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வரகாபொல, தும்பலிஎத்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன இருவரின் சடலங்களும் அவர்களுள் அடங்கும்.

அந்த வீட்டில் இருந்த 47 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே 24 வயதுடைய இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் 3 பேர் வீட்டில் தங்கியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக 264 பேர் தற்போது 4 பாதுகாப்பான மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மழை நிலைமையை கருத்திற் கொண்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பெற்றோர்கள் மற்றும் முதியவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

களனி, பட்டியாவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மீது கனரக வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் நிபுணர் பிரித்திகா ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...