பரீட்சைகளுக்கான திகதி மற்றும் விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர  பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியும் உயர்த்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும்.

பின்னர், டிசம்பர் 23 ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை, நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முடிவுறுத்தப்படும்.

பெப்ரவரி 16ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதிவரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பின்னர் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை மார்ச் முதலாம் திகதி தொடக்கம், மார்ச் 21 வரை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...