அண்மையில் இடம்பெற்ற மிகப்பெரும் பேரழிவான பாகிஸ்தானிய வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்து இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இதன் தாக்கத்தால் ஏராளமான மக்கள் மருந்துகள், உணவுகள் இன்றியும் பரிதவிக்கின்றார்கள்.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகமும் நிவாரண அமைப்புக்களும் பாகிஸ்தானிய மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என எகிப்தின் பிரதான ஆன்மீக தலைமைப் பீடமான அல் அஸ்ஹர் வேண்டுகோள் விடுத்துள்ளது.