நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உரிய நீர் கட்டணங்களை செலுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் வரை எந்தவொரு பாடசாலையின் நீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் நீர் வழங்கல் சபையிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவிற்கும் நீர் வழங்கல் சபையின் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.