பாடசாலைகள் உதைபந்தாட்ட அணியில் மிளிரும் நட்சத்திரம், மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அணி!

Date:

கொழும்பு சாஹிரா கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட சூப்பர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடர் 17வது தடவையாக அண்மையில் இடம்பெற்றது.

இந்தத் தொடரில் முதல் தடவையாக களம் இறங்கிய கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி பிரபலமான பாடசாலைகள் பலவற்றை தோற்கடித்து இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

பாடசாலைகள் உதைபந்தாட்ட அணிகளில் மிகவும் பிரபலமான கொழும்பு சாஹிராக் கல்லூரியை இறுதிப் போட்டியில் சந்தித்த தாருஸ்ஸலாம் அணி மிகத் தீவிரமாகப் போராடி போட்டியை சம நிலையில் முடித்துக் கொண்டது.

அதனை அடுத்து இறுதிப் போட்டியை ஏற்பாட்டாளர்களின் முடிவின் படி பெனால்டி முறையில் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

பெனால்டிக்கான வாய்ப்பின் போது 3- 2 என்ற ரீதியில் சாஹிராக் கல்லூரி அணி வெற்றி வாய்ப்பை தனதாக்கி கொண்டது.

இந்தத் தொடரில் முதல் தடவையாகப் போட்டியிட்டு பிரபலமான பாடசாலை அணிகளுக்கு எல்லாம் சவால் விடுக்கும் வகையில் விளையாடி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்ட மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அணி அனைவரதும் பாராட்டைப் பெற்றதோடு பாடசாலை உதைபந்தாட்ட ரசிகர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க அணி, கந்தானை டி. மெஸ்னாஸ்ட் அணி, இந்தப் போட்டித் தொடரின் நடப்பு சாம்பியன் மருதானை சென் ஜோஸப் கல்லூரி ஆகிய பிரபல அணிகளை இந்தத் தொடரில் எதிர்கொண்ட தாருஸ்ஸலாம் அணி அவற்றை வீழ்த்தி இறுதிவரை முன்னேறியமை பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

அதுமட்டுமன்றி இறுதிப் போட்டியில் இன்னொரு பிரபல அணியான கொட்டாஞ்சேனை சென்.பெனடிக்ட் அணியை 4-0 என்ற ரீதியில் தோல்வி அடையச் செய்தமை பாடசாலை உதைபந்தாட்ட ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இத்தொடரின் ஆட்ட நாயகன் விருதாக தங்கக் காலணி (Golden Boot) 20 வயதுக்கு கீழ்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்தவம் செய்யும் மொஹமட் சுஹைபுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு மிகவும் நியாயமாக விளையாடிய அணிக்கான Fair Play Award உம் தாருஸ்ஸலாம் அணிக்கே வழங்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அணி ஒரு நட்சத்திர அணியாக மிளிரத் தொடங்கி உள்ளமை அவதானிக்கத்தக்கதாகும்.

தாருஸ்ஸலாம் கல்லூரியின்; சிரேஷ்ட அணியின் பயிற்றுவிப்பாளராக தேசிய அணியின் வீரர் மொஹமட் இஸ்ஸதீன் கடமையாற்றுகின்றார்.

கனிஷ்ட அணியின் பயிற்றுவிப்பாளராக கல்லூரியின் பழைய மாணவர் மொஹமட் இப்றாஹிம் பணியாற்றுகின்றார். சிறப்பு பந்து தடுப்பு (Goal Keeper) பயிற்சியாளராக மொஹமட் றியாஸ் பணிபுரிகின்றார்.

தாருஸ்ஸலாம் உதைபந்தாட்ட அணியின் வளர்ச்சிக்காக கல்லூரியின் பழைய மாணவர்கள் விளையாட்டுக் குழு அர்ப்பணத்தோடு பல உதவிகளை புரிந்து வருகின்ற நிலையில் பிரதேச மக்களும் இந்த அணியின் வளர்ச்சிக்கான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

பாடசாலை அணி: இடமிருந்து வலம் பர்ஹான் எம் காலித், எம்.ஹனான், எம். அப்துல்லாஹ், எம்.எம்.றைஹான், எம்.எம். சக்கி (அணித் தலைவர்) எம்.சியான் (கோல் காப்பாளர்), எம்.அயாஸ், எம்.ஷமீர் (அணி உப தலைவர்), எம். சுஹைப்

தொடரின் ஆட்ட நாயகனாகத் தெரிவாகி தங்கக் காலணியை தனதாக்கிக் கொண்ட 20 வயதுக்கு கீழ்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்யும் மொஹமட் சுஹைப்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...