பாராளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை நிறுவ முடியாது? – சுசில் விளக்கம்

Date:

இந்த நாட்டில் எந்தவொரு நபரும் பாராளுமன்றத்தை போன்று பொது சபையையோ அல்லது வேறு எந்த நிறுவனத்தையோ நிறுவ முடியாது என சபாநாயகர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை ஸ்தாபிக்க தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தால் கூட இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாது என தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளை மாற்ற முடியும் என்றும் இந்த விவகாரம் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...