சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்க அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட 04/2022 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இது தொடர்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாது பிடிவாதமாக செயற்படுவது தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், அடிப்படை உரிமைகளை நிறுவனச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்றும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திர பத்திரிகை இயக்கம் கோருகிறது.