மருத்துவர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கும் அரசாங்கம் வரி விதிக்கும்!: பந்துல

Date:

எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்

அதேநேரம் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு வரி கோப்பு திறக்கப்படும். அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் சேனலிங் செய்யும் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் ஆகியோர் பெரும் தொகை வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதிலும் அவர்கள் இதுவரை வரி செலுத்துவதில்லை.

எனவே அவர்களையும் வரி செலுத்தும் வலையமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேறகொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கூடுதல் வருமானத்தைப் பெறுவோரிடம் நேரடி வரி அறவிடப்படாத போதிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ள மறைமுக வரிகளை விதிக்க வேண்டியேற்படும். அது ஏழை மக்களுக்கு சுமையாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...