ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச மஸ்ஜித்களின் நிருவாக சபை அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 01ம் 2ம் திகதிகளில் காத்தான்குடி CIG வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தியில் மஸ்ஜித்களின் பங்கு, மஸ்ஜித்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள், அவற்றுக்கான திட்டமிடல் வழிமுறைகள், தீர்வுகள் என்பன குறித்த விளக்கங்களும் செயலமர்வ்களும் இந் நிகழ்ச்சியில் இடம் பெற்றன.
Dr. Zihan சமூக வைத்திய அதிகாரி Dr. Faique, ஜாமியா நளீமிய்யா விரிவுரையாளர்களான Dr. Zihan naleemi, Asheikh.Hassan Sulaiman
ஆகியோர் இந் நிகழ்ச்சியில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
MEEDS consultancy (PVT) Ltd இவ் இரண்டு நாள் நிகழ்வுக்கான இணை ஏற்பாடாளராக கலந்து கொண்டதோடு, newsnow.lk ஊடக அணுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.