ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள புதிய பயணம் செயற்கையானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர்களின் நிகழ்ச்சி ஒரு நகைச்சுவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் வேறு சிலர் இருக்கிறார்களா என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சர்வகட்சி அரசாங்கமொன்றை முன்மொழிந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை, சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் நாடு சர்வதேசத்தின் ஆதரவையும் உதவிகளையும் தொடர்ந்தும் பெறும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.