இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 7,500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், தமக்கு அதிகாரம் அற்ற முறைப்பாடுகள் அவற்றில் உள்ளதாக அதன் தலைவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் பற்றாக்குறைக்கு மத்தியில் பல சிரமங்களை எதிர்நோக்கும் இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைவர் தெரிவித்தார்.
அண்மையில் காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையினால் சிறுவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிராகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமது அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உயத குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.