60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த யானைத் தொல்லைக்கு தீர்வு காணும் வகையில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் முயற்சியின் கீழ் ஹபரணை பிரதேசத்தில் மாதிரி வேலியாக ரித்திகலவை அண்மித்த பண்டிவௌ கிராமத்தில் 4.4 கிலோமீற்றர் பரப்பளவில் மின்சார வேலி அமைக்கப்பட்டு நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த மின்சார வேலி இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட அதி நவீன மற்றும் பலமான மின்சார வேலி என தற்போதைய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனவரி 2022 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், சினமன் ஹோட்டல் குழுமம் மற்றும் TUI அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
மேலும் அந்த நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.
கரு ஜயசூரிய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஜேர்மன் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் TUI தலைவராக உள்ளார்.
30 வருடங்களுக்கும் மேலாக இந்த விடயத்தில் ஆய்வு செய்து வரும் கலாநிதி பிருதுவிராஜ் பெர்னாண்டோ மற்றும் கலாநிதி சுமித் பிலப்பிட்டிய ஆகியோர் இத்திட்டத்திற்கு தேவையாக வளங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் மத்தியில் உரையாற்றிய கரு ஜயசூரிய, யானை – மனித மோதலினால் வருடாந்தம் 300 மனித யானைகள் உயிரிழப்பதாகவும், இந்த மாதிரியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முடிந்தால் அது நாட்டுக்கு பெரும் பலமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
உலகில் யானை-மனித மோதல் அதிகம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது.