2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் பிரகாரம் வரிச்சலுகை குறைக்கப்பட்டு வரி வலையின் தளம் விரிவடையும்.
இதனால், மொத்த மாத வருமானம் ரூ. 100,000 அல்லது அதற்கு மேல் வருமான வரி விதிக்கப்படும். மிக உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% ஆக உள்ளது.