விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன: மகாவலி, களு, களனி ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும் உயர்வு!

Date:

நோட்டன் பிரிட்ஜ் நீர்மின் நிலைய நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் நிரம்பி வழியும் மட்டத்திற்கு மிக அருகில் உள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், விமலசுரேந்திர, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய நீர்மின் நிலையங்களில் நீர் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்படும் என மின் நிலைய பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தொடரும் மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மகாவலி, களு மற்றும் களனி ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் பல இடங்களில் அபாயகரமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி ஆற்றின் கிதுல்கல பிரதேசம், கெஹல்கமு ஓயாவின் நோர்வூட் பகுதி, களு ஆற்றின் கலவெல்லவ பிரதேசம், பேராதனை மற்றும் மகாவலி ஆற்றின் நாவலப்பிட்டி பிரதேசங்களில் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

கித்துல்கல பிரதேசத்தில் இருந்து களனி ஆற்றிலும் பேராதனை பிரதேசத்திலிருந்து மகாவலி ஆற்றிலும் நீர் மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...