ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு!

Date:

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர்  காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...