பாகிஸ்தானிய அரசின் கீழுள்ள பாகிஸ்தானிய உயர்கல்விக்கான கவுன்சிலினால் வருடாந்தம் இலஙகை மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்விக்கான புலமைப் பரிசில் தொடரில், 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்று மலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கண்ணி போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த , சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 400மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் இவ்வைபவத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வைபவம் பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி தலைமையில் நடைபெற்றது.
பாகிஸ்தான் உயர் கல்விக்கான சபையின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கல்ந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் பல பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்ட அதேவேளை, கல்வித்துறை சார்ந்த தேசிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இலங்கை பல்கலைக்கழங்கங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.