லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் புதிய இலட்சினை நேற்று வௌியிடப்பட்டது.
உத்தியோகபூர்வ இலட்சினையை வடிவமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது.
இதில், துணிச்சலைக் குறிக்கும் வகையில் ´சிங்கம்´ சின்னத்தைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட இலச்சினை, எல் பி எல்லின் அதிகாரப்பூர்வ இலச்சினையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் வசிக்கும் 24 வயதுடைய மியுலிக வீரமந்திரி என்ற இளைஞரால் குறித்த இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.