அமைச்சுக்களின் கீழ் சில நிறுவங்கள் இணைப்பு: வர்த்தமானி அறிவிப்பு!

Date:

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய இராஜாங்க அமைச்சுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, 1990 சுவாசார்யா அறக்கட்டளை, தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபை ஆகியவை சுகாதார அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரச சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆயுர்வேத திணைக்களம், ஆயுர்வேத வைத்திய சபை, இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் திணைக்களம், அரச அச்சக திணைக்களம் மற்றும் இலங்கை அச்சக நிறுவனம் என்பன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய மொத்த விற்பனை முனைய நிறுவனம், திருகோணமலை பெற்றோலிய முனைய நிறுவனம், இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் எல்லைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...