ஆசியாவிலேயே அதிகமான அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட நாடாக இலங்கை!

Date:

ஆசியாவிலேயே அதிகமாக அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 9 வீதமாக இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டின் 6 மாதத்துக்குள் 2 இலட்சம் தனியார் துறையினர் பணிகளை இழப்பார்கள் என்று ஆய்வு மூலம் அறிய வந்துள்ளது.

நிதி அமைச்சு நடத்திய சமீபத்தைய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஆசியாவிலேயே அதிக சதவீத அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் இலங்கை 10ஆவது இடத்தில் இருக்கிறது. பாதுகாப்புக்காக வடகொரியா, அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் தங்கள் வரவு – செலவு திட்டத்தில் அதிக நிதியை ஒதுக்குகின்றன.

இலங்கையும் அதிக நிதியை பாதுகாப்புக்காகவே ஒதுக்குகிறது. நாட்டின் பணியாளர்களில் 18 வீதத்தினர் அரச உத்தியோகத்தர்கள். ஆனால், மிகவும் வளர்ந்த மலேசியாவில் அந்த சதவீதம் 14. மியன்மாரில் 5. ஒட்டுமொத்த ஆசியாவில், மற்ற நாடுகளில் உள்ள அரசு பணியளார்களின் விகிதம் 10 வீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தனித்துவமான பொருளாதார தரவுகளை குறிப்பிடும் கணக்கெடுப்பு அறிக்கையானது நிதியமைச்சுடன் இணைந்து நாட்டில் உள்ள பிரபல தனியார் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...