பெண் ஆசிரியைகளுக்கு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கல்விச் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் உரிய ஆடைகளை அணிந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் அவ்வாறான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.