இங்கிலாந்தின் 57வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கின் விரிவான அனுபவம் அவரது கடமைகளை நிறைவேற்றும் திறனுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று ஜனாதிபதி வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் இங்கிலாந்தும் பாரம்பரியமான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுனக்கின் தலைமைத்துவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து, “இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்த நான் எதிர்நோக்குகிறேன், எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.