கத்தாரிலுள்ள இலங்கை மகளிர் சங்கம், கத்தாரிலுள்ள இலங்கையர்களை ஒன்றிணைக்கும் வகையிலான பிரஜைகள் தின விழா நிகழ்வொன்றுக்கு கத்தாரில் வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கத்தார் மியூஸியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு இன்று (11) மாலை 7.00 மணி முதல் 7.45 வரை இஸ்லாமிக் ஆர்ட் பார்க் நூதனசாலைக்கு அருகில் உள்ள ப்ளக் ப்ளாஸா (Flag Plaza) வில் நடைபெறவுள்ளது.
இந்தப் பிரஜைகள் தின விழாவில் கத்தாரிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் கீழ் இயங்குகின்ற ஸ்டபோர்ட் இலங்கைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறவிருக்கின்றன.