இலங்கை விமானப்படையினால் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில் செயல்திட்டம்!

Date:

2030 ஆம் ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை 27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில்  வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் இலங்கை விமானப்படையினரினால் கடந்த 29 அன்று சியாம்பலா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப்பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

வீரவெல இலங்கை விமானப்படை தளத்தை மையமாக கொண்டு இல. 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகாப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைகுண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன் , வேம்பு , ஆத்தி , நாகை , புளி , பருத்தி , பாலை , வீரை , மருது , கித்துள் உட்பட 100,000 விதைகள் தாயரிக்கப்பட்டு வான் வழிமூலம் தெளிக்கப்பட்டன

இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் , பேராதெனிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...