‘உங்களைப் போல் நாங்கள் போரில் ஈடுபடவில்லை’ :ஜோ பைடனுக்கு பதிலளித்த இம்ரான் கான்

Date:

அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. எங்களிடம் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு உள்ளது” என  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பிரசாரக்குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டார். அப்போது பிற நாடுகள் உடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அவர் விளக்கமளித்தார்.

அப்போது பேசிய பைடன் , “எனது பார்வையில் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. எந்த வகையான ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது” எனக் கூறினார்.

அவரின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளர்.

ஜோ பைடனின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. எங்களிடம் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...